• Aug 21 2025

அரசாங்கத்தின் மீது சேறு பூச முற்படும் தமிழரசு கட்சி - பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

shanuja / Aug 20th 2025, 5:20 pm
image

நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றிணைய வேண்டும் மாறாக இனவாதத்திற்கு வித்திடக் கூடாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  


“யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற இராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இன்றைய நாடாளுமன்றில் பேசப்பட்டது. 


யுத்த காலத்தில் இந்தியாவின் அகதி முகாமிற்கு சென்றுள்ளனர். அந்த காலகட்டத்தில் உயிரை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்று, தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 10 வருடங்களுக்கும் மேலாக 110 இலங்கை அகதிகள் இருக்கின்றனர்.


இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்களுக்கு இலங்கையிலும் இந்தியாவிலும் குடியுரிமை இல்லை எனவே நானும் அமைச்சர் சந்திரசேகரும் அங்கு சென்று இது தொடர்பில் பேசி குடியுரிமை பிரச்சினைக்கு முடிவு எடுக்கப்பட்டது.


எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் 6 ஆயிரம் பேர் வரை மீண்டும் நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். அவ்வாறு நாடு திரும்பியவர்கள் பாரதிபுரம், கனகபுரம் போன்ற பிரதேசங்களில் காணிகள் வழங்கி மின்சார வசதியையும் ஏற்படுத்திக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை நான் மேற்கொண்டுள்ளேன்.


ஆனால் இவ்வாறு வருபவர்களை கைது செய்யவதாகச் சொல்லப்படுகின்றது. சின்னையா சிவலோகநாதன், என்பவர் காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தமிழரசு கட்சியில் தேர்தலில் தோற்றுப் போன ஒரு வர் தெரிவித்திருந்தார். பி736 பிசி25 என்பது தான் அந்த வழக்கு எண்.


எனவே நானும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் தலையீடு செய்து இரண்டு நாட்களின் பின்னா விடுதலை செய்திருந்தோம். இவ்வாறு கைது செய்வது அரசாங்கத்தின் கொள்கை அல்ல. ஏனென்றால் நாங்கள் நாட்டை ஆளுகின்றோம் ஒரு சில பேரை அல்ல.


அரச உத்தியோகத்தர்கள் பல இருக்கின்றனர் எனவே எங்கோ ஒரு தவறு  நிகழலாம். எனவே இவ்வாறான சில வியடங்களை எடுத்து பேசுவது அரசாங்கத்தின் மீது சேறு பூசும் செயற்பாடுகளே.


அந்த வகையில் வடக்கிலும் தெற்கிலும் தற்போது இனவாதிகளுக்கு இடம் இல்லை. அவர்கள் தற்போது நிர்க்கதியாகியுள்ளனர். இதன் பின்னணியில் தான் வடக்கு மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் கெடுபிடிகளைச் செய்கின்றது என்ற விம்பத்தை உருவாக்கியுள்ளனர்.


இவர்கள் வடக்கில் இருக்கும் ரஜபக்ஷவினரி நிழலாக செயற்படுகின்றனர்” எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அரசாங்கத்தின் மீது சேறு பூச முற்படும் தமிழரசு கட்சி - பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றிணைய வேண்டும் மாறாக இனவாதத்திற்கு வித்திடக் கூடாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  “யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற இராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இன்றைய நாடாளுமன்றில் பேசப்பட்டது. யுத்த காலத்தில் இந்தியாவின் அகதி முகாமிற்கு சென்றுள்ளனர். அந்த காலகட்டத்தில் உயிரை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்று, தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 10 வருடங்களுக்கும் மேலாக 110 இலங்கை அகதிகள் இருக்கின்றனர்.இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்களுக்கு இலங்கையிலும் இந்தியாவிலும் குடியுரிமை இல்லை எனவே நானும் அமைச்சர் சந்திரசேகரும் அங்கு சென்று இது தொடர்பில் பேசி குடியுரிமை பிரச்சினைக்கு முடிவு எடுக்கப்பட்டது.எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் 6 ஆயிரம் பேர் வரை மீண்டும் நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். அவ்வாறு நாடு திரும்பியவர்கள் பாரதிபுரம், கனகபுரம் போன்ற பிரதேசங்களில் காணிகள் வழங்கி மின்சார வசதியையும் ஏற்படுத்திக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை நான் மேற்கொண்டுள்ளேன்.ஆனால் இவ்வாறு வருபவர்களை கைது செய்யவதாகச் சொல்லப்படுகின்றது. சின்னையா சிவலோகநாதன், என்பவர் காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தமிழரசு கட்சியில் தேர்தலில் தோற்றுப் போன ஒரு வர் தெரிவித்திருந்தார். பி736 பிசி25 என்பது தான் அந்த வழக்கு எண்.எனவே நானும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் தலையீடு செய்து இரண்டு நாட்களின் பின்னா விடுதலை செய்திருந்தோம். இவ்வாறு கைது செய்வது அரசாங்கத்தின் கொள்கை அல்ல. ஏனென்றால் நாங்கள் நாட்டை ஆளுகின்றோம் ஒரு சில பேரை அல்ல.அரச உத்தியோகத்தர்கள் பல இருக்கின்றனர் எனவே எங்கோ ஒரு தவறு  நிகழலாம். எனவே இவ்வாறான சில வியடங்களை எடுத்து பேசுவது அரசாங்கத்தின் மீது சேறு பூசும் செயற்பாடுகளே.அந்த வகையில் வடக்கிலும் தெற்கிலும் தற்போது இனவாதிகளுக்கு இடம் இல்லை. அவர்கள் தற்போது நிர்க்கதியாகியுள்ளனர். இதன் பின்னணியில் தான் வடக்கு மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் கெடுபிடிகளைச் செய்கின்றது என்ற விம்பத்தை உருவாக்கியுள்ளனர்.இவர்கள் வடக்கில் இருக்கும் ரஜபக்ஷவினரி நிழலாக செயற்படுகின்றனர்” எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement