முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, சுமார் 490 ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், உயிரிழந்த உறுப்பினர்களின் மனைவிமார்களும் இந்த ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர்.
இவர்களில் பலர் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்வதாகவும், அவர்களில் 4 முன்னணி கட்சித் தலைவர்களும் உள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் திருடர்கள் அல்லது மோசடி செய்பவர்கள் எனக் கருத முடியாது.
சில முன்னாள் உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியத்தை உணவு மற்றும் மருந்து வாங்குவதற்குப் பயன்படுத்துவதாகவும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன் அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியக் குறைப்பு - மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். தற்போது, சுமார் 490 ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், உயிரிழந்த உறுப்பினர்களின் மனைவிமார்களும் இந்த ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர்.இவர்களில் பலர் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்வதாகவும், அவர்களில் 4 முன்னணி கட்சித் தலைவர்களும் உள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் திருடர்கள் அல்லது மோசடி செய்பவர்கள் எனக் கருத முடியாது.சில முன்னாள் உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியத்தை உணவு மற்றும் மருந்து வாங்குவதற்குப் பயன்படுத்துவதாகவும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன் அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.