கொழும்பில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாடசாலை அதிபரை விளக்கம் கேட்டு வரவழைத்ததாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது, மேலும் அது கிடைத்தவுடன் தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
அதேநேரம், தற்போது மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவிக்கு நீதி கோரி, பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல மகளிர் பாடசாலையின் முன் இன்று (08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலையின் ஆண் ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
குற்றவாளியைப் பாதுகாத்ததாக குறித்த பாடசாலையின் அதிபர் மீதும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன், அவருக்கு எதிரான அதிருப்தியை வெளியிட்டனர்.
குறித்த மாணவியின் மரணத்திற்கு பின்னர் ஊடகங்களிலும் பேசிய அவரது பெற்றோர், பம்பலப்பிட்டியில் உள்ள அவரது முன்னாள் பாடசாலை ஆண் ஆசிரியர் ஒருவரால் தமது மகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.
மேலும், அந்தச் சிறுமி இறப்பதற்கு முன்பு, ஒரு தனியார் கல்வி நிலையத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தவிவகாரம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.
கொழும்பில் மாணவி உயிர்மாய்ப்பு; சம்பந்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் கொழும்பில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாடசாலை அதிபரை விளக்கம் கேட்டு வரவழைத்ததாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது, மேலும் அது கிடைத்தவுடன் தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.அதேநேரம், தற்போது மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவிக்கு நீதி கோரி, பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல மகளிர் பாடசாலையின் முன் இன்று (08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலையின் ஆண் ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.குற்றவாளியைப் பாதுகாத்ததாக குறித்த பாடசாலையின் அதிபர் மீதும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன், அவருக்கு எதிரான அதிருப்தியை வெளியிட்டனர்.குறித்த மாணவியின் மரணத்திற்கு பின்னர் ஊடகங்களிலும் பேசிய அவரது பெற்றோர், பம்பலப்பிட்டியில் உள்ள அவரது முன்னாள் பாடசாலை ஆண் ஆசிரியர் ஒருவரால் தமது மகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.மேலும், அந்தச் சிறுமி இறப்பதற்கு முன்பு, ஒரு தனியார் கல்வி நிலையத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.இந்தவிவகாரம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.