இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டார்.
நீண்டகாலமாக வீடற்ற நிலையில் ஒரு வீட்டில் நான்கு ஐந்து குடும்பங்களாக வாழ்ந்து வந்த தொழிலாளி ஒருவர், தனக்கென ஒரு தற்காலிக குடிசையை அமைத்தபோது, முழு முகத்தையும் மூடிய தலைக்கவசம் அணிந்த ஒரு குண்டர் கும்பல் புகுந்து அங்கிருந்தவர்களைக் கடுமையாகத் தாக்கி குடிசையையும் உடைத்துள்ளது.
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்திய இந்த கும்பல் குறித்து தகவல் கிடைத்தவுடன், தான் உடனடியாக கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு சட்டத்தை அமுல்படுத்துமாறு பணிப்புரை விடுத்ததாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அதன் விளைவாக அன்றிரவே தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தோட்ட நிர்வாகத்தினால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற முப்படையினரை உள்ளடக்கிய பாதுகாப்பு குழுவினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அநீதிக்குள்ளான தோட்ட இளைஞர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்டத்தரணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பைத் தான் வழங்கியதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருடன் நேரடியாக அத்தோட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிலைமைகளை நேரில் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பிரதி அமைச்சர், இது தொடர்பாக மூன்று முக்கிய தீர்மானங்களை முன்னெடுத்துள்ளார்.
அதன்படி, பாதுகாப்பு குழு என்ற பெயரில் ஓய்வுபெற்ற முப்படையினரை அமர்த்தி அவர்களை குண்டர் படையாகச் செயற்பட அனுமதித்தது குறித்து தோட்ட நிர்வாகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நிர்வாகம் எடுக்கப்போகும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தோட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியை அவர்களுக்கே வீடமைக்க வழங்குவதற்கான ஆவணங்களை உடனடியாகத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகத்தின் நிறைவேற்று அதிகாரியை நேரடியாக அழைத்து எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், எக்காரணம் கொண்டும் பாதுகாப்புப் படையினரை மக்களைத் துன்புறுத்தப் பயன்படுத்தக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இச்சம்பவம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு மலையக மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இவ்வாறான அநீதிகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும், இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கம் என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்றைய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை பிரதி அமைச்சர் பிரதீப் இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டார்.நீண்டகாலமாக வீடற்ற நிலையில் ஒரு வீட்டில் நான்கு ஐந்து குடும்பங்களாக வாழ்ந்து வந்த தொழிலாளி ஒருவர், தனக்கென ஒரு தற்காலிக குடிசையை அமைத்தபோது, முழு முகத்தையும் மூடிய தலைக்கவசம் அணிந்த ஒரு குண்டர் கும்பல் புகுந்து அங்கிருந்தவர்களைக் கடுமையாகத் தாக்கி குடிசையையும் உடைத்துள்ளது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்திய இந்த கும்பல் குறித்து தகவல் கிடைத்தவுடன், தான் உடனடியாக கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு சட்டத்தை அமுல்படுத்துமாறு பணிப்புரை விடுத்ததாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.அதன் விளைவாக அன்றிரவே தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தோட்ட நிர்வாகத்தினால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற முப்படையினரை உள்ளடக்கிய பாதுகாப்பு குழுவினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அநீதிக்குள்ளான தோட்ட இளைஞர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்டத்தரணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பைத் தான் வழங்கியதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருடன் நேரடியாக அத்தோட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிலைமைகளை நேரில் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.இச்சம்பவம் குறித்து அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பிரதி அமைச்சர், இது தொடர்பாக மூன்று முக்கிய தீர்மானங்களை முன்னெடுத்துள்ளார்.அதன்படி, பாதுகாப்பு குழு என்ற பெயரில் ஓய்வுபெற்ற முப்படையினரை அமர்த்தி அவர்களை குண்டர் படையாகச் செயற்பட அனுமதித்தது குறித்து தோட்ட நிர்வாகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நிர்வாகம் எடுக்கப்போகும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தோட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியை அவர்களுக்கே வீடமைக்க வழங்குவதற்கான ஆவணங்களை உடனடியாகத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளது.தோட்ட நிர்வாகத்தின் நிறைவேற்று அதிகாரியை நேரடியாக அழைத்து எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், எக்காரணம் கொண்டும் பாதுகாப்புப் படையினரை மக்களைத் துன்புறுத்தப் பயன்படுத்தக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இச்சம்பவம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு மலையக மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இவ்வாறான அநீதிகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும், இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கம் என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்றைய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.