• Jan 14 2025

முட்டைகளை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை..!

egg
Sharmi / Dec 9th 2024, 8:37 am
image

நாடளாவிய ரீதியில் முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 35 முதல் 36 ரூபாய் வரை விற்பனையாகிறது.

எவ்வாறாயினும், நாட்டின் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப முட்டையின் விலை தீர்மானிக்கப்படுவதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் தேவை அதிகரிக்கலாம்.

இதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 45 ரூபாவிற்கும் குறைவாகவே தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தற்போது அரிசி மற்றும் சோளத்தின் விலை உயர்வினால் முட்டை ஒன்றின் உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழி இறைச்சி உற்பத்தி உபரியாக இருப்பதால், கோழி இறைச்சியை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜிக் குணசேகர தெரிவித்தார்.

முட்டைகளை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை. நாடளாவிய ரீதியில் முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாட்டில் தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 35 முதல் 36 ரூபாய் வரை விற்பனையாகிறது.எவ்வாறாயினும், நாட்டின் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப முட்டையின் விலை தீர்மானிக்கப்படுவதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் தேவை அதிகரிக்கலாம்.இதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 45 ரூபாவிற்கும் குறைவாகவே தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை, தற்போது அரிசி மற்றும் சோளத்தின் விலை உயர்வினால் முட்டை ஒன்றின் உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கோழி இறைச்சி உற்பத்தி உபரியாக இருப்பதால், கோழி இறைச்சியை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜிக் குணசேகர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement