• Apr 18 2026

2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி!

Chithra / Mar 18th 2026, 9:33 am
image

 

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம்  அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அதன்படி, 2024 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 12,508,954 மில்லியனிலிருந்து, 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 13,128,577 மில்லியனாக அதிகரித்துள்ளது.


பொருளாதாரத்தின் பிரதான மூன்று துறைகளான விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் முறையே 2025 ஆம் ஆண்டில் 1.4%, 7.8% மற்றும் 3.3% என்ற வீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், 2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.8% என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது ஆண்டிறுதியில் பொருளாதார நடவடிக்கைகளின் நேரடி வளர்ச்சியைக் காட்டுகின்றதெனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி  2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம்  அறிக்கையில் தெரிவித்துள்ளது.அதன்படி, 2024 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 12,508,954 மில்லியனிலிருந்து, 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 13,128,577 மில்லியனாக அதிகரித்துள்ளது.பொருளாதாரத்தின் பிரதான மூன்று துறைகளான விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் முறையே 2025 ஆம் ஆண்டில் 1.4%, 7.8% மற்றும் 3.3% என்ற வீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், 2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.8% என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது ஆண்டிறுதியில் பொருளாதார நடவடிக்கைகளின் நேரடி வளர்ச்சியைக் காட்டுகின்றதெனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement