• Apr 18 2026

பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Chithra / Mar 18th 2026, 9:31 am
image


இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


ஊடக சந்திப்பு ஒன்றில் உரையாற்றியவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 


தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அதே நேரம் சரக்குக் கட்டணங்கள் அதிகரித்ததன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகள் சிறிதளவு உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் கடை உரிமையாளர்களும் மொத்த வியாபாரிகளும் தேவையற்ற முறையில் பொருட்களைப் பதுக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.


அதற்கமைய, கடை உரிமையாளர்களும் மொத்த வியாபாரிகளும் அத்தகைய தேவையற்ற பொருட்களைப் பதுக்கி வைக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதுடன் எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், போதுமான அளவு பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.ஊடக சந்திப்பு ஒன்றில் உரையாற்றியவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அதே நேரம் சரக்குக் கட்டணங்கள் அதிகரித்ததன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகள் சிறிதளவு உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் கடை உரிமையாளர்களும் மொத்த வியாபாரிகளும் தேவையற்ற முறையில் பொருட்களைப் பதுக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.அதற்கமைய, கடை உரிமையாளர்களும் மொத்த வியாபாரிகளும் அத்தகைய தேவையற்ற பொருட்களைப் பதுக்கி வைக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதுடன் எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், போதுமான அளவு பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement