• Jan 16 2026

இலங்கையின் கடல்வள வருமான இழப்பு மற்றும் கல்வி மறுசீரமைப்பு - விஜேதாச ராஜபக்ஷ கடும் விமர்சனம்

Chithra / Jan 14th 2026, 7:46 pm
image


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் அமைச்சர்  விஜேதாச ராஜபக்ஷ இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போது, நாட்டின் கடல் எல்லை வருமானம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு குறித்து பல முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

இலங்கையின் கடல் எல்லைப் பகுதியில் தற்போது 8 சதவீதமாக உள்ள 'வெள்ளை வலயத்தை' (White Zone) 23 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று 2023 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 

தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்கரைப் பகுதியில் காணப்படும் 'கோபால்ட்' (Cobalt) எனப்படும் பெறுமதிமிக்க கனிம வளத்தின் முக்கியத்துவம் காரணமாகவே இந்த நடைமுறைப்படுத்தல் தாமதிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இலங்கைக் கடல் எல்லையை கடந்து செல்லும் கப்பல்களிடமிருந்து அறவிடப்படும் வருமானம் தற்போது இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கு ஆண்டுதோறும் சுமார் 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாரா (NARA) நிறுவனம் ஆழ்கடல் அளவீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு சுமார் 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை கோரியுள்ள போதிலும், அந்த முதலீட்டை செய்யாமல் ஆண்டுதோறும் 51 மில்லியன் டொலர் வருமானத்தை நாடு இழந்து வருகின்றது.

இந்த உபகரணத்தை உடனடியாக கொள்வனவு செய்து, கப்பல் போக்குவரத்தின் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தை நாட்டுக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கல்வி மறுசீரமைப்பு குறித்து கருத்துத் தெரிவித்த விஜேதாச ராஜபக்ஷ, 2027 ஆம் ஆண்டு கல்வி மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது ஒரு கட்டுக்கதை எனத் தெரிவித்தார். பாடப்புத்தகங்களை டிஜிட்டல் மயப்படுத்துவது உண்மையான கல்வி மறுசீரமைப்பு அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.

 இலங்கையில் ஒவ்வொரு மாணவரிடமும் ஸ்மார்ட்போன் இருப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்றும், மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் போது கல்விச் சார்ந்த தளங்களை மட்டும் அணுகுவார்களா? என்பது கேள்விக்குறி என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டங்களை உருவாக்கி வரும் நிலையில், இலங்கையில் மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக அவர் சாடினார்.

 கல்வி மறுசீரமைப்பிற்கு முன்னதாக அரசாங்கத்தை மறுசீரமைக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராக இருப்பதாகவும், இது அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அல்ல, மாறாகத் தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்றும் கூறினார். மக்கள் கருத்தைப் பெற்று, எதிர்க்கட்சிகள் மற்றும் மகா சங்கத்தினருடன் கலந்தாலோசித்து சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமே தவிர, தன்னிச்சையாகச் செயல்படுவது நாட்டுக்கு ஆபத்தானது என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்தார்.

இலங்கையின் கடல்வள வருமான இழப்பு மற்றும் கல்வி மறுசீரமைப்பு - விஜேதாச ராஜபக்ஷ கடும் விமர்சனம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் அமைச்சர்  விஜேதாச ராஜபக்ஷ இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போது, நாட்டின் கடல் எல்லை வருமானம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு குறித்து பல முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.இலங்கையின் கடல் எல்லைப் பகுதியில் தற்போது 8 சதவீதமாக உள்ள 'வெள்ளை வலயத்தை' (White Zone) 23 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று 2023 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்கரைப் பகுதியில் காணப்படும் 'கோபால்ட்' (Cobalt) எனப்படும் பெறுமதிமிக்க கனிம வளத்தின் முக்கியத்துவம் காரணமாகவே இந்த நடைமுறைப்படுத்தல் தாமதிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.இலங்கைக் கடல் எல்லையை கடந்து செல்லும் கப்பல்களிடமிருந்து அறவிடப்படும் வருமானம் தற்போது இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கு ஆண்டுதோறும் சுமார் 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.நாரா (NARA) நிறுவனம் ஆழ்கடல் அளவீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு சுமார் 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை கோரியுள்ள போதிலும், அந்த முதலீட்டை செய்யாமல் ஆண்டுதோறும் 51 மில்லியன் டொலர் வருமானத்தை நாடு இழந்து வருகின்றது.இந்த உபகரணத்தை உடனடியாக கொள்வனவு செய்து, கப்பல் போக்குவரத்தின் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தை நாட்டுக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.கல்வி மறுசீரமைப்பு குறித்து கருத்துத் தெரிவித்த விஜேதாச ராஜபக்ஷ, 2027 ஆம் ஆண்டு கல்வி மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது ஒரு கட்டுக்கதை எனத் தெரிவித்தார். பாடப்புத்தகங்களை டிஜிட்டல் மயப்படுத்துவது உண்மையான கல்வி மறுசீரமைப்பு அல்ல என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் ஒவ்வொரு மாணவரிடமும் ஸ்மார்ட்போன் இருப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்றும், மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் போது கல்விச் சார்ந்த தளங்களை மட்டும் அணுகுவார்களா என்பது கேள்விக்குறி என்றும் அவர் குறிப்பிட்டார்.அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டங்களை உருவாக்கி வரும் நிலையில், இலங்கையில் மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக அவர் சாடினார். கல்வி மறுசீரமைப்பிற்கு முன்னதாக அரசாங்கத்தை மறுசீரமைக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராக இருப்பதாகவும், இது அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அல்ல, மாறாகத் தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்றும் கூறினார். மக்கள் கருத்தைப் பெற்று, எதிர்க்கட்சிகள் மற்றும் மகா சங்கத்தினருடன் கலந்தாலோசித்து சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமே தவிர, தன்னிச்சையாகச் செயல்படுவது நாட்டுக்கு ஆபத்தானது என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement