• Apr 28 2026

மனைவியைக் கொன்ற இலங்கை கணவருக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை

Aathira / Feb 21st 2026, 8:57 am
image

பிரித்தானியாவில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற இலங்கை கணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிரித்தானியா வேல்ஸில் உள்ள கார்டிஃப் நகரின் புறநகர்ப் பகுதியில் இலங்கை கணவர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

ஆரம்பத்தில் தனது மனைவியை கொன்றதை மறுத்தார்.

இருப்பினும், கொலை நடந்த அன்று கத்தி வைத்திருந்ததை அவர் பின்னர் ஒப்புக்கொண்டார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , இது தொடர்பில்  பிப்ரவரி 20 அன்று தண்டனை வழங்கப்படும், அந்த திகதி வரை கணவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது தனது பிரிந்த இலங்கை மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற 37 வயது இலங்கையருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவருக்கு குறைந்தபட்சம் 23 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த பின்னர், அவர் விடுதலை பெறுவார் என கூறப்படுகிறது.

மனைவியைக் கொன்ற இலங்கை கணவருக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை பிரித்தானியாவில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற இலங்கை கணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பிரித்தானியா வேல்ஸில் உள்ள கார்டிஃப் நகரின் புறநகர்ப் பகுதியில் இலங்கை கணவர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.ஆரம்பத்தில் தனது மனைவியை கொன்றதை மறுத்தார்.இருப்பினும், கொலை நடந்த அன்று கத்தி வைத்திருந்ததை அவர் பின்னர் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , இது தொடர்பில்  பிப்ரவரி 20 அன்று தண்டனை வழங்கப்படும், அந்த திகதி வரை கணவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.இந்த நிலையில், குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது தனது பிரிந்த இலங்கை மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற 37 வயது இலங்கையருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அவருக்கு குறைந்தபட்சம் 23 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த பின்னர், அவர் விடுதலை பெறுவார் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement