• May 14 2025

அதிக பயணிகளை ஏற்றி சட்டத்தை மீறும் இலங்கை போக்குவரத்து சபை! எழுந்த குற்றச்சாட்டு

Bus
Chithra / May 14th 2025, 8:22 am
image

 பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட, அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது என, வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பு சவால்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மேல் மாகாண செயலணியின் இணைப்பாளர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். 

இலங்கை போக்குவரத்து சபையும் இந்த சட்டத்தை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொத்மலை - கெரண்டி எல்ல பேருந்து விபத்து தொடர்பில் கருத்துரைத்த அவர், 

இந்தியாவிலிருந்து தரமற்ற பேருந்துகளே இறக்குமதி செய்யப்படுவதாகச் சுட்டிக் காட்டியிருந்தார். 

 

 

அதிக பயணிகளை ஏற்றி சட்டத்தை மீறும் இலங்கை போக்குவரத்து சபை எழுந்த குற்றச்சாட்டு  பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட, அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது என, வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பு சவால்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மேல் மாகாண செயலணியின் இணைப்பாளர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையும் இந்த சட்டத்தை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொத்மலை - கெரண்டி எல்ல பேருந்து விபத்து தொடர்பில் கருத்துரைத்த அவர், இந்தியாவிலிருந்து தரமற்ற பேருந்துகளே இறக்குமதி செய்யப்படுவதாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.   

Advertisement

Advertisement

Advertisement