எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி கூறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் எதற்காக ஒன்றிணைந்தோம் என்பதை அனைவரும் அறிவர். ரணில் விக்கிரமசிங்க என்பது ஒரு காரணியாகும்.
ஆனால் இந்த தேசிய மக்கள் சக்தி நாட்டில் தொடர்ந்தும் காணப்படும் பல கட்சி ஆட்சி முறைமையை இல்லாதொழித்து ஒரு கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
இதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்தையும் அடக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தாம் நினைப்பது மாத்திரமே சரி என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
இன்று நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக நிலைப்பாட்டிலேயே சகலரும் காணப்படுகின்றனர். ஜனநாயகத்தை பாதுகாக்க விரும்பும் அனைவரும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு அநுரவுக்கு விசேட நன்றி - துமிந்த கருத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி கூறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,நாம் எதற்காக ஒன்றிணைந்தோம் என்பதை அனைவரும் அறிவர். ரணில் விக்கிரமசிங்க என்பது ஒரு காரணியாகும். ஆனால் இந்த தேசிய மக்கள் சக்தி நாட்டில் தொடர்ந்தும் காணப்படும் பல கட்சி ஆட்சி முறைமையை இல்லாதொழித்து ஒரு கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.இதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்தையும் அடக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். தாம் நினைப்பது மாத்திரமே சரி என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். இன்று நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக நிலைப்பாட்டிலேயே சகலரும் காணப்படுகின்றனர். ஜனநாயகத்தை பாதுகாக்க விரும்பும் அனைவரும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.