நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (02) இடம்பெற்ற வீதி விபத்துகளில் 8 வயது சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகள் பொல்கஹவெல, இரத்தினபுரி, கட்டுநாயக்க, ஏறாவூர், குளியாபிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.
குளியாபிட்டிய-ஹெட்டிபொல வீதியில், கோமுகமுவ சந்திக்கு அருகில், ஹெட்டிபொல திசையில் இருந்து வந்த லொறி, எதிர்த்திசையில் வந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
இதில், படுகாயமடைந்த மூவரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
மற்றொரு சம்பவத்தில், பொல்கஹவெல-கேகாலை வீதியில் பொல்கஹவெல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் சென்ற தனியார் பேருந்துடன் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இம்புல்கஸ்தெனியவைச் சேர்ந்த 8 வயது சிறுமி காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இரத்தினபுரி-பாணந்துறை வீதியில் இரத்தினபுரி நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதகு ஒன்றில் மோதியது.
இதில் காயமடைந்த சாரதி மற்றும் பயணியான 82 வயது பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்தார்.
இதேவேளை, கட்டுநாயக்க - ஆடியம்பலம-கிம்புலாபிட்டிய வீதியில் கிம்புலாபிட்டிய நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதிய விபத்தில் பாதசாரியும் மோட்டார் சைக்கிள் சாரதியும் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பாதசாரியான 50 வயது நபர் உயிரிழந்தார். இதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவில், களுவன்கேணி ரயில் கடவையில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 26 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் களுவன்கேணியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம்-புத்தளம் வீதியில், கொட்டபிட்டி சந்திக்கு அருகில், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதிய விபத்தில், படுகாயமடைந்த பாதசாரியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதசாரி உயிரிழந்தார்.
நாளுக்கு நாள் இவ்வாறு வீதி விபத்துக்கன் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வீதி விபத்துகளில் சிறுமி உட்பட ஆறு பேர் பலி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (02) இடம்பெற்ற வீதி விபத்துகளில் 8 வயது சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் பொல்கஹவெல, இரத்தினபுரி, கட்டுநாயக்க, ஏறாவூர், குளியாபிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.குளியாபிட்டிய-ஹெட்டிபொல வீதியில், கோமுகமுவ சந்திக்கு அருகில், ஹெட்டிபொல திசையில் இருந்து வந்த லொறி, எதிர்த்திசையில் வந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். இதில், படுகாயமடைந்த மூவரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.மற்றொரு சம்பவத்தில், பொல்கஹவெல-கேகாலை வீதியில் பொல்கஹவெல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் சென்ற தனியார் பேருந்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இம்புல்கஸ்தெனியவைச் சேர்ந்த 8 வயது சிறுமி காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இரத்தினபுரி-பாணந்துறை வீதியில் இரத்தினபுரி நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதகு ஒன்றில் மோதியது. இதில் காயமடைந்த சாரதி மற்றும் பயணியான 82 வயது பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்தார்.இதேவேளை, கட்டுநாயக்க - ஆடியம்பலம-கிம்புலாபிட்டிய வீதியில் கிம்புலாபிட்டிய நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதிய விபத்தில் பாதசாரியும் மோட்டார் சைக்கிள் சாரதியும் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் பாதசாரியான 50 வயது நபர் உயிரிழந்தார். இதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவில், களுவன்கேணி ரயில் கடவையில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 26 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உயிரிழந்தவர் களுவன்கேணியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிலாபம்-புத்தளம் வீதியில், கொட்டபிட்டி சந்திக்கு அருகில், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதிய விபத்தில், படுகாயமடைந்த பாதசாரியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதசாரி உயிரிழந்தார்.நாளுக்கு நாள் இவ்வாறு வீதி விபத்துக்கன் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.