• May 15 2025

ஆபத்தான நிலையிலிருந்து தேறி வருகின்றார் சிவாஜிலிங்கம்!

Chithra / Dec 11th 2024, 7:26 am
image


கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.

தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான சிவாஜிலிங்கம் கொழும்புக்கு மருத்துவ பரிசோனைக்காகச் சென்றிருந்த நிலையில் திடீரென உடல் நிலை பாதிப்புக்குள்ளானது.

இதனை அடுத்து கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை சேர்க்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை தொடக்கம் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், நேற்று செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளததாக கூறப்படுகிறது. 

ஆபத்தான நிலையிலிருந்து தேறி வருகின்றார் சிவாஜிலிங்கம் கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான சிவாஜிலிங்கம் கொழும்புக்கு மருத்துவ பரிசோனைக்காகச் சென்றிருந்த நிலையில் திடீரென உடல் நிலை பாதிப்புக்குள்ளானது.இதனை அடுத்து கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை சேர்க்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை தொடக்கம் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.எனினும், நேற்று செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளததாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now