• Nov 07 2025

கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிச் சூடு ரத்மலானை - கொளுமடம பகுதியில் பதற்றம்!

shanuja / Oct 25th 2025, 9:28 pm
image

கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இந்தச் சம்பவம் ரத்மலானை - கொளுமடம சந்தியில் இன்று இடம்பெற்றுள்ளது. 


தங்களது கட்டளையை மீறிச் சென்றமையினாலேயே, குறித்த  வேன் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  


துப்பாக்கிச்சூட்டுச்  சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் வேனின் சாரதியை  கைது செய்த கல்கிசை பொலிஸார் சம்பவம் தொடர்பில்

விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


தொடர்ச்சியாக தென்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிச் சூடு ரத்மலானை - கொளுமடம பகுதியில் பதற்றம் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ரத்மலானை - கொளுமடம சந்தியில் இன்று இடம்பெற்றுள்ளது. தங்களது கட்டளையை மீறிச் சென்றமையினாலேயே, குறித்த  வேன் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  துப்பாக்கிச்சூட்டுச்  சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் வேனின் சாரதியை  கைது செய்த கல்கிசை பொலிஸார் சம்பவம் தொடர்பில்விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.தொடர்ச்சியாக தென்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement