களனி - வனவாசல வரையிலான ரயில் கடவையில் கார் மீது ரயில் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளாதாக தெரிவிக்கபடுகிறது
கொழும்பிலிருந்து ரம்புக்கனை நோக்கி மாலை 5.35 மணிக்கு பயணித்த ரயில், களனி - வனவாசல ரயில் கடவையில் சென்று கொண்டிருந்தபோது,ரயில் சமிக்ஞையை மீறி, ரயில் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைக் கடந்து சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் ரயில் இயந்திரத்தின் ஒரு பகுதி கழன்று விழுந்துள்ளது.
விபத்து ஏற்பட்ட பிறகு, ரயில் இயந்திரத்துடன் இடித்து நின்ற வாகனம், வனவாசல நோக்கி சுமார் அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அக்கம்பக்கத்தினர் சேர்ந்து வாகனத்தின் கதவுகளை உடைத்து, ஓட்டுநரை வெளியே எடுத்து, சுவ சரிய ஆம்புலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த விபத்து காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமிக்ஞையை மீறி சென்ற காரை மோதித் தள்ளிய ரயில்; ஒருவர் வைத்தியசாலையில் களனி - வனவாசல வரையிலான ரயில் கடவையில் கார் மீது ரயில் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளாதாக தெரிவிக்கபடுகிறதுகொழும்பிலிருந்து ரம்புக்கனை நோக்கி மாலை 5.35 மணிக்கு பயணித்த ரயில், களனி - வனவாசல ரயில் கடவையில் சென்று கொண்டிருந்தபோது,ரயில் சமிக்ஞையை மீறி, ரயில் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைக் கடந்து சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் ரயில் இயந்திரத்தின் ஒரு பகுதி கழன்று விழுந்துள்ளது. விபத்து ஏற்பட்ட பிறகு, ரயில் இயந்திரத்துடன் இடித்து நின்ற வாகனம், வனவாசல நோக்கி சுமார் அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.அக்கம்பக்கத்தினர் சேர்ந்து வாகனத்தின் கதவுகளை உடைத்து, ஓட்டுநரை வெளியே எடுத்து, சுவ சரிய ஆம்புலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.குறித்த விபத்து காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.