• May 19 2025

யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்ப பெண்- உடற்கூற்று பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

Thansita / May 19th 2025, 5:46 pm
image

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 

யாழ். தாவணி பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் நோய் குணமடையாத நிலையில் நேற்றுமுன்தினம் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த பெண்ணின் கணவரும் கடந்த 2008ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்ப பெண்- உடற்கூற்று பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். தாவணி பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்ணுக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் நோய் குணமடையாத நிலையில் நேற்றுமுன்தினம் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.இதேவேளை குறித்த பெண்ணின் கணவரும் கடந்த 2008ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement