நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விசேட அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (19) வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சபரகமுவ, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat Index) 'அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு' (Caution Level) அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துவதுடன், தேவையற்ற வகையில் வெயிலில் தங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்.
அதன்படி, மன்னார், அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், மாத்தளை, குருநாகல், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுர, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அது வலியுறுத்தியுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, பொதுமக்கள் திறந்தவெளிகள் மற்றும் நீர்நிலைகளைத் தவிர்க்கவும், மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
16 மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம் - 19 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விசேட அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை (19) வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி மேல், சபரகமுவ, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat Index) 'அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு' (Caution Level) அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துவதுடன், தேவையற்ற வகையில் வெயிலில் தங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்.அதன்படி, மன்னார், அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், மாத்தளை, குருநாகல், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுர, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழையின் போது, குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அது வலியுறுத்தியுள்ளது.இடியுடன் கூடிய மழையின் போது, பொதுமக்கள் திறந்தவெளிகள் மற்றும் நீர்நிலைகளைத் தவிர்க்கவும், மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.