• Apr 15 2026

தீவிரமடையும் டெங்கு: 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாடுமாறு எச்சரிக்கை

Chithra / Mar 2nd 2026, 9:28 am
image


இந்த வருடத்தில் இதுவரை 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 


கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அப்பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.


எனவே, இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை நாடிச் சிகிச்சை பெறுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீவிரமடையும் டெங்கு: 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாடுமாறு எச்சரிக்கை இந்த வருடத்தில் இதுவரை 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அப்பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.எனவே, இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை நாடிச் சிகிச்சை பெறுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement