• Apr 17 2026

கிளிநொச்சியில் கோர விபத்து; இரு இளைஞர்கள் பரிதாபப் பலி!

Chithra / Apr 4th 2026, 8:15 am
image

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.


தர்மபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். 


இதன்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாகச் சென்றமையால் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த மோட்டார் கிரைண்டர் ரக வாகனத்துடன் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.


இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18  வயதுடைய  தியாகராசா விக்கினேஸ்வரன் மற்றும் 19 வயதுடைய ஜெரின் கனிஸ்ரன் ஆகிய இளைஞர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கிளிநொச்சியில் கோர விபத்து; இரு இளைஞர்கள் பரிதாபப் பலி கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.தர்மபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இதன்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாகச் சென்றமையால் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த மோட்டார் கிரைண்டர் ரக வாகனத்துடன் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18  வயதுடைய  தியாகராசா விக்கினேஸ்வரன் மற்றும் 19 வயதுடைய ஜெரின் கனிஸ்ரன் ஆகிய இளைஞர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement