• Jul 14 2025

பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம்!

Thansita / Jun 14th 2025, 11:20 am
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது.

எனவே பாதுகாப்பற்ற சிறுமிகளை இணங்கண்டு  இவர்களை பாதுகாப்பதுடன் இவற்றை தடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஷ்பிரயோகத்தை தடுக்கும் 'சறோஜா'  திட்டம்  ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்டபத்தில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றது. 

இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

 குழந்தைகள் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்கள் அதனால் இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை.

ஒரு பெண் குழந்தைக்கு பாலியஸ் துஸ்பிரயோகம் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை. எனவே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது

 அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும்.

சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தாய் தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள். இவ்வாறு ஏற்படும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுக்காப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

எனவே 'சரோஜா' திட்டமானது பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த திட்டம்

எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு இந்த பாலியல் துஸ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படவேண்டும்.

 இதற்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள். வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது. எனவே பாதுகாப்பற்ற சிறுமிகளை இணங்கண்டு  இவர்களை பாதுகாப்பதுடன் இவற்றை தடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஷ்பிரயோகத்தை தடுக்கும் 'சறோஜா'  திட்டம்  ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்டபத்தில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் குழந்தைகள் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்கள் அதனால் இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை.ஒரு பெண் குழந்தைக்கு பாலியஸ் துஸ்பிரயோகம் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை. எனவே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும்.சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தாய் தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள். இவ்வாறு ஏற்படும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுக்காப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.எனவே 'சரோஜா' திட்டமானது பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த திட்டம் எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு இந்த பாலியல் துஸ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படவேண்டும். இதற்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள். வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now