• Jul 01 2025

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Chithra / Jul 1st 2025, 1:02 pm
image


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டப்பட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார். 

மேலும் அன்றைய தினத்திற்கு முன்னர் விசாரணைகளை முடித்து நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, இலங்கை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும் அன்றைய தினத்திற்கு முன்னர் விசாரணைகளை முடித்து நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, இலங்கை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement