• May 10 2025

நிலவும் உப்பு தட்டுப்பாடு: யாழ்.மக்களுக்காக விசேட நடவடிக்கை..!

Sharmi / May 10th 2025, 6:35 pm
image

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், உப்பு விநியோகம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமானது மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது.

179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை பொதுமக்கள் இன்று(10) முதல் கொள்வனவு செய்ய முடியும். 

பொதுமகன் ஒருவர் ஆகக் கூடியது 3 உப்பு பக்கெட்களையே கொள்வனவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



நிலவும் உப்பு தட்டுப்பாடு: யாழ்.மக்களுக்காக விசேட நடவடிக்கை. வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், உப்பு விநியோகம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமானது மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது.179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை பொதுமக்கள் இன்று(10) முதல் கொள்வனவு செய்ய முடியும். பொதுமகன் ஒருவர் ஆகக் கூடியது 3 உப்பு பக்கெட்களையே கொள்வனவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement