• Sep 24 2025

தங்காலையில் போதைப்பொருள் மீட்பு - வெளியான புதிய அதிர்ச்சி தகவல்

Chithra / Sep 24th 2025, 7:35 pm
image


தங்காலை பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21 ஆம் திகதி இரண்டு கப்பல்களில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகவும், குறித்த போதைப்பொருட்கள் குடவெல்ல, மாவெல்ல கடற்கரையில் 

தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த போதைப்பொருள் அங்கிருந்து, கடற்கரைக்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கொள்கலன்மூலம் சீனிமோதர மற்றும் கொடெல்லவெல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

குறித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, தங்காலை - சீனிமோதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மூன்று கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 705 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 988 கோடி ரூபாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 


தங்காலையில் போதைப்பொருள் மீட்பு - வெளியான புதிய அதிர்ச்சி தகவல் தங்காலை பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21 ஆம் திகதி இரண்டு கப்பல்களில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகவும், குறித்த போதைப்பொருட்கள் குடவெல்ல, மாவெல்ல கடற்கரையில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பின்னர் குறித்த போதைப்பொருள் அங்கிருந்து, கடற்கரைக்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கொள்கலன்மூலம் சீனிமோதர மற்றும் கொடெல்லவெல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.முன்னதாக, தங்காலை - சீனிமோதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மூன்று கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 705 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 988 கோடி ரூபாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement