இந்தியா- வேலூர் மாவட்டம் - குடியாத்தம் பகுதியில் மிளகாய்ப்பொடி தூவி கடத்தப்பட்ட 4 வயது குழந்தையை பொலிஸார் 2 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேலூர் மாவட்டம் - குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த வேணு என்பவரின் நான்கு வயது ஆண் குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
இன்று பிற்பகல் பாடசாலை முடிந்து குழந்தையை அவரது தந்தை வீட்டிற்கு தனது வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.
வீட்டினுள் குழந்தையுடன் வாகனத்தை ஏற்றிய வேணு, பிறகு குழந்தையை இறக்கிவிட்டு, வண்டியை நிறுத்தியுள்ளார்.
அப்போது திடீரென ஓடிவந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர், தந்தையான வேணுவின் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு, சிறுவனை தூக்கி, தயாராக இருந்த காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார்.
குழந்தையை தூக்கிச் சென்ற நபரை துரத்திய தந்தை, காரில் இருந்த அந்த நபரை பிடிக்க முற்பட்டார். ஆனால், கார் வேணுவை இழுத்தபடி நகர்ந்து செல்ல அவர் வீதியில் விழுந்துள்ளார்.
உடனடியாக இது குறித்து குடியாத்தம் நகர பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பொலிஸார் சிறுவன் வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சற்றும் தாமதிக்காத பொலிஸார் 4 தனிப்படைகளை அமைத்து சிறுவனை தேடும் பணியில் இறங்கியது. இதற்குள் இரண்டு மணி நேரத்திற்குள் வேலூர் – ஆம்பூர் சாலையில் உள்ள மாதனூர் பகுதியில் இருந்து பொலிஸாருக்கு ஒரு சிறுவன் தனியாக சாலை ஓரம் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து உடனடியாக அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் சிறுவனை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் கடத்தல்காரர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் உள்ளிட்டவை குறித்து குடியாத்தம் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தந்தையின் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் 2 மணிநேரத்தில் மீட்கப்பட்டது எப்படி இந்தியா- வேலூர் மாவட்டம் - குடியாத்தம் பகுதியில் மிளகாய்ப்பொடி தூவி கடத்தப்பட்ட 4 வயது குழந்தையை பொலிஸார் 2 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேலூர் மாவட்டம் - குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த வேணு என்பவரின் நான்கு வயது ஆண் குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இன்று பிற்பகல் பாடசாலை முடிந்து குழந்தையை அவரது தந்தை வீட்டிற்கு தனது வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.வீட்டினுள் குழந்தையுடன் வாகனத்தை ஏற்றிய வேணு, பிறகு குழந்தையை இறக்கிவிட்டு, வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென ஓடிவந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர், தந்தையான வேணுவின் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு, சிறுவனை தூக்கி, தயாராக இருந்த காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார்.குழந்தையை தூக்கிச் சென்ற நபரை துரத்திய தந்தை, காரில் இருந்த அந்த நபரை பிடிக்க முற்பட்டார். ஆனால், கார் வேணுவை இழுத்தபடி நகர்ந்து செல்ல அவர் வீதியில் விழுந்துள்ளார். உடனடியாக இது குறித்து குடியாத்தம் நகர பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பொலிஸார் சிறுவன் வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சற்றும் தாமதிக்காத பொலிஸார் 4 தனிப்படைகளை அமைத்து சிறுவனை தேடும் பணியில் இறங்கியது. இதற்குள் இரண்டு மணி நேரத்திற்குள் வேலூர் – ஆம்பூர் சாலையில் உள்ள மாதனூர் பகுதியில் இருந்து பொலிஸாருக்கு ஒரு சிறுவன் தனியாக சாலை ஓரம் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது.இதனை அடுத்து உடனடியாக அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் சிறுவனை மீட்டுள்ளனர்.இந்நிலையில் கடத்தல்காரர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் உள்ளிட்டவை குறித்து குடியாத்தம் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.