இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையின் ஊழியர்களுக்கான கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
வவுனியா சாலையில் பணிபுரியும் சாரதிகள், காப்பாளர்கள், பொறியியலாளர்கள் ஆகிய ஊழியர்களுக்கே இவ்வாறு சம்பளம் வழங்கப்படவில்லை.
குறித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 8 ஆம் திகதி அவர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இன்றுடன் 5 நாட்கள் கடக்கின்ற நிலையில் இதுவரை கடந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பண்டிகைக் காலம் இடம்பெற்றுவரும் நிலையில் தமக்கான சம்பளம் வழங்கப்படாமையினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சம்பள விவகாரம்: வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் அவதி. இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையின் ஊழியர்களுக்கான கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.வவுனியா சாலையில் பணிபுரியும் சாரதிகள், காப்பாளர்கள், பொறியியலாளர்கள் ஆகிய ஊழியர்களுக்கே இவ்வாறு சம்பளம் வழங்கப்படவில்லை.குறித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 8 ஆம் திகதி அவர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.எனினும் இன்றுடன் 5 நாட்கள் கடக்கின்ற நிலையில் இதுவரை கடந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.பண்டிகைக் காலம் இடம்பெற்றுவரும் நிலையில் தமக்கான சம்பளம் வழங்கப்படாமையினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.