• Dec 28 2025

காரின் அடியில் வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்யாவின் லெப்டினன்ட் ஜெனரல் உயிரிழப்பு!

shanuja / Dec 22nd 2025, 2:42 pm
image

கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


குறித்த சம்பவம் ரஷ்யாவின் தலைநகர் தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 


ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இந்தச் சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனினும், உக்ரைன் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. 


சம்பவத்தை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

காரின் அடியில் வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்யாவின் லெப்டினன்ட் ஜெனரல் உயிரிழப்பு கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவம் ரஷ்யாவின் தலைநகர் தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உக்ரைன் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. சம்பவத்தை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement