• Dec 28 2025

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

Chithra / Dec 10th 2025, 10:35 am
image



சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளது. 


மனிதாபிமான உதவிப் பொருட்கள் 35 தொன் அளவுடன் விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டதாக, இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர இன்று அதிகாலை தெரிவித்துள்ளார். 


இதேவேளை  இலங்கை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தைத் தாக்கிய பேரழிவு தரும் வெள்ளத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 2.4 மில்லியன் யூரோ அவசர உதவியை வெளியிட்டுள்ளது.


இலங்கையில் நிவாரண முயற்சிகளை ஆதரிக்க 1.8 மில்லியன் யூரோ ( சுமார் 640 மில்லியன் ரூபா)  வரை ஒதுக்கப்பட்டுள்ளது.


இதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் பேரிடர் மீட்பு அவசர நிதியத்தின் மூலம் வழங்கப்படும் 500,000 யூரோ அடங்கும். 


நிதி உதவியுடன், ஐரோப்பிய ஒன்றியம் அதன் சிவில் பாதுகாப்பு பொறிமுறையின் மூலம் இந்த நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. 

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிப் பொருட்கள் 35 தொன் அளவுடன் விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டதாக, இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர இன்று அதிகாலை தெரிவித்துள்ளார். இதேவேளை  இலங்கை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தைத் தாக்கிய பேரழிவு தரும் வெள்ளத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 2.4 மில்லியன் யூரோ அவசர உதவியை வெளியிட்டுள்ளது.இலங்கையில் நிவாரண முயற்சிகளை ஆதரிக்க 1.8 மில்லியன் யூரோ ( சுமார் 640 மில்லியன் ரூபா)  வரை ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் பேரிடர் மீட்பு அவசர நிதியத்தின் மூலம் வழங்கப்படும் 500,000 யூரோ அடங்கும். நிதி உதவியுடன், ஐரோப்பிய ஒன்றியம் அதன் சிவில் பாதுகாப்பு பொறிமுறையின் மூலம் இந்த நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. 

Advertisement

Advertisement

Advertisement