இலங்கை தமழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 128 ஆவது ஜனன தின நினைவு கூறல் நிகழ்வு (31) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் கட்சியின் தலைவர் திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் திரு.எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தவர்கள் தந்தை செல்வாநாயகம் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேற்படி நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர், யாழ்ப்பாணம் தொகுதி தலைவர், செயலாளர், முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தந்தை செல்வாவின் 128 ஜனன தின நினைவு கூறல் – முதல்வர் மதிவதனி அஞ்சலி இலங்கை தமழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 128 ஆவது ஜனன தின நினைவு கூறல் நிகழ்வு (31) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் கட்சியின் தலைவர் திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்.இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் திரு.எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தவர்கள் தந்தை செல்வாநாயகம் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.மேற்படி நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர், யாழ்ப்பாணம் தொகுதி தலைவர், செயலாளர், முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.