ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் உயிரிழந்த சம்பவங்களுக்கு ஆர்.சி.பி அணியே பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 18 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக ஐ.பி.எல் சம்பியன் பட்டத்தை ஆர்.சி.பி அணி கைப்பற்றியது. அந்த வெற்றிக் கொண்டாட்டம் கடந்த ஜூன் 4ஆம் திகதி நடைபெற்றது . அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதன்போது போதிய பாதுகாப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக ஐந்து உயர் அதிகாரிகளை முதல்வர் சித்தராமையா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் ஆணையாளர் விகாஷ் குமார் மனு அளித்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் கூட்ட நெரிசலுக்கு ஆர்சிபியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், விகாஷ்குமாரின் இடைநீக்கத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.சி.பி வெற்றிக்கொண்டாட்டம் - உயிரிழப்புகளுக்கு அணியே பொறுப்பு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் உயிரிழந்த சம்பவங்களுக்கு ஆர்.சி.பி அணியே பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த 18 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக ஐ.பி.எல் சம்பியன் பட்டத்தை ஆர்.சி.பி அணி கைப்பற்றியது. அந்த வெற்றிக் கொண்டாட்டம் கடந்த ஜூன் 4ஆம் திகதி நடைபெற்றது . அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதன்போது போதிய பாதுகாப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக ஐந்து உயர் அதிகாரிகளை முதல்வர் சித்தராமையா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் ஆணையாளர் விகாஷ் குமார் மனு அளித்திருந்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம் கூட்ட நெரிசலுக்கு ஆர்சிபியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், விகாஷ்குமாரின் இடைநீக்கத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.