• Aug 27 2025

ரணில் விக்ரமசிங்கவின் கைது - எங்களுக்கு அப்பாற்பட்ட விடயம்! - காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி!

shanuja / Aug 26th 2025, 4:20 pm
image

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராஜா செல்வராணி தெரிவித்தார்.

கல்முனை ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாங்கள் எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அரசியலில் ஈடுபாடில்லை.அத்துடன் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயம்.


எங்களது உறவுகளையும் உயிர்களையும் இன்று தொலைத்தவர்களை நாங்கள் வீதிகளிலும் பல இடங்களிலும் தேடுகிறோம்.


எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது அதற்கான உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதே எங்களுக்கு முதன்மை நோக்கமாகும். அதன் பிற்பாடுகள் தான் ஏனைய விடயங்களில் நாங்கள் பரிசீலனை செய்வோம் என்று தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் கைது - எங்களுக்கு அப்பாற்பட்ட விடயம் - காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராஜா செல்வராணி தெரிவித்தார். கல்முனை ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,நாங்கள் எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அரசியலில் ஈடுபாடில்லை.அத்துடன் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயம்.எங்களது உறவுகளையும் உயிர்களையும் இன்று தொலைத்தவர்களை நாங்கள் வீதிகளிலும் பல இடங்களிலும் தேடுகிறோம். எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது அதற்கான உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதே எங்களுக்கு முதன்மை நோக்கமாகும். அதன் பிற்பாடுகள் தான் ஏனைய விடயங்களில் நாங்கள் பரிசீலனை செய்வோம் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement