• Aug 29 2025

மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட ரணில்; வீட்டில் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்து!

shanuja / Aug 29th 2025, 4:07 pm
image


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மருத்துவமனையில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பொதுச்சொத்துக்களை சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டார். 


கைது செய்யப்பட்ட மறுகணமே உடலில் ஏற்பட்ட சுகவீனத்தால் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்நோயாளி சிகிச்சைக்குப் பிறகு  இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டுள்ளார். 


மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும்  நெருக்கமான மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  


உடல்நிலை சரியாகும் வரை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட ரணில்; வீட்டில் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மருத்துவமனையில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பொதுச்சொத்துக்களை சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மறுகணமே உடலில் ஏற்பட்ட சுகவீனத்தால் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்நோயாளி சிகிச்சைக்குப் பிறகு  இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும்  நெருக்கமான மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  உடல்நிலை சரியாகும் வரை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement