• Jul 19 2025

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு! – அமைச்சர் சந்திரசேகர் உறுதி

Chithra / Jul 18th 2025, 12:33 pm
image


தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார்.

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு நேற்று மாலை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர்  சுகிர்தன் மற்றும் சபை உறுப்பினர்கள் நேரில் விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக கிடங்கு வெட்டப்பட்டிருந்ததாக தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட பலரும் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், 

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்தார்.

தனித்தனி விஜயமாக வந்திருந்த இரு குழுவினரும், விகாரை வளாகத்தில் சந்தித்து, பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் சந்திரசேகர் உறுதி தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார்.யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு நேற்று மாலை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர்  சுகிர்தன் மற்றும் சபை உறுப்பினர்கள் நேரில் விஜயம் மேற்கொண்டனர்.இதன்போது குறித்த பகுதியில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக கிடங்கு வெட்டப்பட்டிருந்ததாக தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.அதேவேளை, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட பலரும் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர்.இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்தார்.தனித்தனி விஜயமாக வந்திருந்த இரு குழுவினரும், விகாரை வளாகத்தில் சந்தித்து, பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement