• May 04 2025

எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் ஏற்பட்ட சிக்கல்

Chithra / May 4th 2025, 1:37 pm
image


கண்டி - பதுளை தொடருந்து மார்க்கத்தின், எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நாட்களில் பெய்துவரும் கனமழை காரணமாக இந்த நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பாலத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஒரு இடமாக எல்ல ஒன்பது வளைவு பாலம் காணப்படுகின்றது. 

எல்ல மற்றும் தெமோதர தொடருந்து நிலையத்திற்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் 300 அடி நீளமும், 25 அடி அகலமும், மற்றும் 80 அடி உயரமும் கொண்டது. 

கட்டப்பட்டு 100 வருடங்களுக்கு மேலான குறித்த பாலத்தின் அடிப்பகுதியில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் ஏற்பட்ட சிக்கல் கண்டி - பதுளை தொடருந்து மார்க்கத்தின், எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நாட்களில் பெய்துவரும் கனமழை காரணமாக இந்த நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பாலத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஒரு இடமாக எல்ல ஒன்பது வளைவு பாலம் காணப்படுகின்றது. எல்ல மற்றும் தெமோதர தொடருந்து நிலையத்திற்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் 300 அடி நீளமும், 25 அடி அகலமும், மற்றும் 80 அடி உயரமும் கொண்டது. கட்டப்பட்டு 100 வருடங்களுக்கு மேலான குறித்த பாலத்தின் அடிப்பகுதியில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement