• May 06 2025

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

Thansita / May 5th 2025, 10:55 pm
image

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று பிரதான உரையை நிகழ்த்த உள்ளார்.

இலங்கை நேரப்படி  நாளை (06)  காலை 7.40 மணியளவில் ஜனாதிபதி  ஐக்கிய நாடுகள் சபையின் 20 ஆவது வெசாக் தின நிகழ்வில் பிரதான உரையை நிகழ்த்த உள்ளார்.

இந்த உரை நாளை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மாலை 5:00 மணிக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

"மனித கண்ணியத்திற்கான ஒத்துழைப்பு மற்றும் சகிப்புத்தன்மை: உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த புரிதல்" என்ற தொனிப் பொருளில் நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் வெசாக் கொண்டாட்டம் மே  08 வரை நடைபெறவுள்ளதோடு,

இலங்கை, இந்தியா, நேபாளம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய பௌத்த நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும்   நாடுகள் மற்றும் 85 பிரதேசங்களைச்  சேர்ந்த  சுமார் 2,800 பேர் இதில் கலந்து கொள்ள உள்ளார்கள்.


20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று பிரதான உரையை நிகழ்த்த உள்ளார்.இலங்கை நேரப்படி  நாளை (06)  காலை 7.40 மணியளவில் ஜனாதிபதி  ஐக்கிய நாடுகள் சபையின் 20 ஆவது வெசாக் தின நிகழ்வில் பிரதான உரையை நிகழ்த்த உள்ளார். இந்த உரை நாளை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மாலை 5:00 மணிக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. "மனித கண்ணியத்திற்கான ஒத்துழைப்பு மற்றும் சகிப்புத்தன்மை: உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த புரிதல்" என்ற தொனிப் பொருளில் நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் வெசாக் கொண்டாட்டம் மே  08 வரை நடைபெறவுள்ளதோடு, இலங்கை, இந்தியா, நேபாளம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய பௌத்த நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும்   நாடுகள் மற்றும் 85 பிரதேசங்களைச்  சேர்ந்த  சுமார் 2,800 பேர் இதில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement