• May 06 2025

நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளர் மீது தாக்குதல்!

Thansita / May 5th 2025, 11:01 pm
image

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீதும் கட்சி உறுப்பினர் மீதும் சற்றுமுன் நெடுந்தீவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

நாளைய தேர்தல் நடவடிக்கைகளுக்கான பணிகளில் ஈடுபட்ட பின்னர் வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டின் அருகில் மறைந்திருந்தோர் பாரிய ஒளியினை வீசி வேட்பாளர் மீது பொல்லுகளால் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை தடுக்க சென்ற இன்னொரு உறுப்பினர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தலையில் காயமடைந்த நிலையில் வேட்பாளர் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் , கட்சியின் மூத்த உறுப்பினரும் காயங்களுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளர் முருகேசு அமிர்தமந்திரன் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர் அ.கணபதிப்பிள்ளை ஆகியோரே தாக்குதலில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளர் மீது தாக்குதல் நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீதும் கட்சி உறுப்பினர் மீதும் சற்றுமுன் நெடுந்தீவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்நாளைய தேர்தல் நடவடிக்கைகளுக்கான பணிகளில் ஈடுபட்ட பின்னர் வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டின் அருகில் மறைந்திருந்தோர் பாரிய ஒளியினை வீசி வேட்பாளர் மீது பொல்லுகளால் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை தடுக்க சென்ற இன்னொரு உறுப்பினர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலையில் காயமடைந்த நிலையில் வேட்பாளர் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் , கட்சியின் மூத்த உறுப்பினரும் காயங்களுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளர் முருகேசு அமிர்தமந்திரன் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர் அ.கணபதிப்பிள்ளை ஆகியோரே தாக்குதலில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement