• Oct 14 2026

IMF உடனான புதிய ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை ஜனாதிபதி அநுரகுமார

dorin / Oct 13th 2026, 12:32 pm
image

தற்போதைய வேலைத்திட்டம் நிறைவடைந்த பின்னரும் சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு ஒப்பந்தத்தில் இணைவதற்கான வாய்ப்பை இலங்கை நிராகரிக்கவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் அடைந்துள்ள பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையிலான புதிய ஒப்பந்தம் குறித்து அரசு ஆராய்ந்து வருகின்றது.

எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய புதிய வேலைத்திட்டத்தின் வடிவம் குறித்து நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியைச் சேர்ந்த உயர்மட்டப் பொருளாதார அதிகாரிகள் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் தொடர்ந்தால், 2025ஆம் ஆண்டில் 440 கோடி அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு, 2026ஆம் ஆண்டில் சுமார் 600 கோடி அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும்.

இத்தகைய வெளிப்புறப் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ளும் திறன் குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

தற்போதைய ஒப்பந்தம் நிறைவடைவதற்கு இன்னும் சுமார் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பின் வலிமை மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டே சர்வதேச நாணய நிதியத்துடனான எதிர்காலத் தொடர்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்." - என்றார்.


IMF உடனான புதிய ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை ஜனாதிபதி அநுரகுமார தற்போதைய வேலைத்திட்டம் நிறைவடைந்த பின்னரும் சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு ஒப்பந்தத்தில் இணைவதற்கான வாய்ப்பை இலங்கை நிராகரிக்கவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் அடைந்துள்ள பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையிலான புதிய ஒப்பந்தம் குறித்து அரசு ஆராய்ந்து வருகின்றது.எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய புதிய வேலைத்திட்டத்தின் வடிவம் குறித்து நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியைச் சேர்ந்த உயர்மட்டப் பொருளாதார அதிகாரிகள் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர்.மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் தொடர்ந்தால், 2025ஆம் ஆண்டில் 440 கோடி அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு, 2026ஆம் ஆண்டில் சுமார் 600 கோடி அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும்.இத்தகைய வெளிப்புறப் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ளும் திறன் குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.தற்போதைய ஒப்பந்தம் நிறைவடைவதற்கு இன்னும் சுமார் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பின் வலிமை மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டே சர்வதேச நாணய நிதியத்துடனான எதிர்காலத் தொடர்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement