• May 21 2025

உயிரிழந்த மாணவி அம்ஷிக்கு பாடசாலை ஆசிரியரால் நடந்த கொடூரம்; பொலிசார் வெளியிட்ட தகவல்

Thansita / May 10th 2025, 4:02 pm
image

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அந்த சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் ,

அவரது பெற்றோர்களால்  மே 4 ஆம் திகதி  ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என்ற  குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. . அதன்படி, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில்  மக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

இந்தப் போராட்டங்கள் கொட்டாஞ்சேனை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலும், பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகிலும், தனியார் வகுப்பு ஒன்றுக்கு அருகிலும் நடத்தப்பட்டன. இந்த சம்பவம்  குறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் குறித்த வழக்காணாது மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில்  சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த மாணவி அம்ஷிக்கு பாடசாலை ஆசிரியரால் நடந்த கொடூரம்; பொலிசார் வெளியிட்ட தகவல் உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் ,அவரது பெற்றோர்களால்  மே 4 ஆம் திகதி  ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என்ற  குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. . அதன்படி, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில்  மக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்கள் கொட்டாஞ்சேனை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலும், பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகிலும், தனியார் வகுப்பு ஒன்றுக்கு அருகிலும் நடத்தப்பட்டன. இந்த சம்பவம்  குறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த வழக்காணாது மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில்  சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now