• May 21 2025

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்: 10 பேர் மரணம்! நாடளாவிய ரீதியில் பரிசோதனைகள் தீவிரம்

Chithra / May 21st 2025, 3:57 pm
image

  

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 21,439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 10 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு, கண்டி, காலி, மாத்தறை, திருகோணமலை, கல்முனை மற்றும் குருணாகல் உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மே 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது. 

அதற்கமைய 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில் 40,108 சுற்றுச்சூழல் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இவற்றில் 10,613 இடங்கள் நுளம்புகள் பெருகக் கூடியவாறு காணப்படுகின்றன. இது நூற்றுக்கு 25 சதவீதமாகும். 

நான்கில் ஒரு சூழல் டெங்கு நுளம்பு பரவக் கூடியவாறு அபாயம் மிக்கவையாகக் காணப்படுகின்றன. 

எனவே சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறு மக்களை அறிவுறுத்துவதாக டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில் சுகாதார அமைச்சினால் அம்பாறை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சுகாதாரப் பிரிவில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி எஸ்.எப்.இஸட்.சராப்டீன் தலைமையில் டெங்கு பரிசோதனைகள் வீடுகள் வடிகான்கள் பொது இடங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன

டெங்குகுடம்பிகள் இனங்காணப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

மேலும் இதன்போது வீடுகள், பாடசாலைகள், உள்ளிட்ட அனைத்து சுற்றுப்புறங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையிலும் பொதுச்சுகாதார பரிசோதரர்கள் சுற்றாடல் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் இராணுவத்தினர் என பலரும் இப் பரிசோதனை செயற்பாடுகளில் கலந்து கொண்டனர்.


அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்: 10 பேர் மரணம் நாடளாவிய ரீதியில் பரிசோதனைகள் தீவிரம்   நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 21,439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 10 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு, கண்டி, காலி, மாத்தறை, திருகோணமலை, கல்முனை மற்றும் குருணாகல் உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.மே 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கமைய 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில் 40,108 சுற்றுச்சூழல் சோதனைக்குட்படுத்தப்பட்டன.இவற்றில் 10,613 இடங்கள் நுளம்புகள் பெருகக் கூடியவாறு காணப்படுகின்றன. இது நூற்றுக்கு 25 சதவீதமாகும். நான்கில் ஒரு சூழல் டெங்கு நுளம்பு பரவக் கூடியவாறு அபாயம் மிக்கவையாகக் காணப்படுகின்றன. எனவே சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறு மக்களை அறிவுறுத்துவதாக டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுகாதார அமைச்சினால் அம்பாறை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சுகாதாரப் பிரிவில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி எஸ்.எப்.இஸட்.சராப்டீன் தலைமையில் டெங்கு பரிசோதனைகள் வீடுகள் வடிகான்கள் பொது இடங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனடெங்குகுடம்பிகள் இனங்காணப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.மேலும் இதன்போது வீடுகள், பாடசாலைகள், உள்ளிட்ட அனைத்து சுற்றுப்புறங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையிலும் பொதுச்சுகாதார பரிசோதரர்கள் சுற்றாடல் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் இராணுவத்தினர் என பலரும் இப் பரிசோதனை செயற்பாடுகளில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement