2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டில் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கங்களின் இந்த தோல்வி, விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் தடைகளால் தான் தென்னாசியாவிற்கு கூட பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்தில் போரிட்ட அதிகாரியின் மகளான யொகானி சில்வாவின் லண்டன் நிகழ்ச்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையும் மக்கள் விடுவிக்கப்பட்டதையும் நிச்சயம் கொண்டாடவேண்டும்.
முடிவிற்கு கொண்டுவர முடியாது என பலர் நினைத்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ஆயுதப்படையினரும் பொலிஸாரும் பெரும் விலையை செலுத்தினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இன்னமும் முதலாம் உலக யுத்த, இரண்டாம் உலக யுத்த வெற்றிகளை கொண்டாடுகின்றது. இதன் காரணமாக இந்த யுத்த வெற்றியை கைவிடுவது அர்த்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையினரை கைவிட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள்; உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் இராணுவ அதிகாரிகள் சவேந்திர சில்வா சீற்றம் 2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டில் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.அரசாங்கங்களின் இந்த தோல்வி, விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது.அமெரிக்கா, பிரிட்டன் தடைகளால் தான் தென்னாசியாவிற்கு கூட பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்தில் போரிட்ட அதிகாரியின் மகளான யொகானி சில்வாவின் லண்டன் நிகழ்ச்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையும் மக்கள் விடுவிக்கப்பட்டதையும் நிச்சயம் கொண்டாடவேண்டும். முடிவிற்கு கொண்டுவர முடியாது என பலர் நினைத்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ஆயுதப்படையினரும் பொலிஸாரும் பெரும் விலையை செலுத்தினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.இலங்கை இன்னமும் முதலாம் உலக யுத்த, இரண்டாம் உலக யுத்த வெற்றிகளை கொண்டாடுகின்றது. இதன் காரணமாக இந்த யுத்த வெற்றியை கைவிடுவது அர்த்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.