• Dec 28 2025

ஊடகங்களை அடக்குவதற்கு பொலிஸார் முயற்சி! சாகர காரியவசம் குற்றச்சாட்டு

Chithra / Dec 27th 2025, 10:34 am
image


ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு  முயற்சிக்கும்  பொலிஸாரின் நடவடிக்கையை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோமென பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தாா்.


பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


திருடர்களை கண்டுபித்து தண்டனை பெற்றுக்கொடுக்க  அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்தே ஜனாதிபதி உள்ளிட்ட  மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள்  எந்த திருடனையும் பிடிக்கவில்லை. 


அவர்களால் திருடர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனதை மறைப்பதற்காக 1990 காலப்பகுயில் இருந்து தலைதூக்கி வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை கையில் எடுத்துக்கொண்டு, அதனை  முழுமையாக ராஜபக்ஷ்வினர் மீது குற்றம் சுமத்த நடவடிக்கை எடுத்தார்கள்.


ஆனால் அவர்களின் இந்த  நடவடிக்கை,  அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவது தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் என்பது மக்கள் முன்னிலேயே ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.


அதேபோன்று நாட்டில் போதைப்பொருள் விநியோகிப்பது, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்தான் என்பதும் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.


அதனால் தற்போது அரசாங்கத்தின் பால் திரும்பியிருக்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சிக்கிறது.


தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உரித்தானது என தெரிவிக்கப்படும் காணியில் கஞ்சா செடி வளர்த்துவருவது தொடர்பான தகவல் வெளிவந்ததுடன் அதனை தனியார் ஊடகம் ஒன்று ஒளிபரப்பி இருந்தது.


இவ்வாறு ஒளிபரப்பியதற்கு எதிராக பொலிஸ் திணைக்களம் குறித்த ஊடக நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.  


அதேபோன்று குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பொய் செய்தி வெளியிட்டுள்ளது.


ஆனால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலே அவர் ஆரம்பத்தில் ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.


அவ்வாறு இல்லாமல் பொலிஸ் அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் மீது தனியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பதாக இருந்தால், அதனை நம்புவதற்கு  இந்த  நாட்டு மக்கள் தயாராக இல்லை.


அதனால் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸாக செயற்படுவதற்கு பதிலாக மக்கள் விடுதலை முன்னணியின் பொலிஸாக செயற்படுவதாகவே எமக்கு தோன்றுகிறது. அதனால் உண்மை தகவல்களை மறைத்து செயற்படும் பொலிஸாரின் இந்த நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார்.


ஊடகங்களை அடக்குவதற்கு பொலிஸார் முயற்சி சாகர காரியவசம் குற்றச்சாட்டு ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு  முயற்சிக்கும்  பொலிஸாரின் நடவடிக்கையை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோமென பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தாா்.பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.திருடர்களை கண்டுபித்து தண்டனை பெற்றுக்கொடுக்க  அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்தே ஜனாதிபதி உள்ளிட்ட  மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள்  எந்த திருடனையும் பிடிக்கவில்லை. அவர்களால் திருடர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனதை மறைப்பதற்காக 1990 காலப்பகுயில் இருந்து தலைதூக்கி வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை கையில் எடுத்துக்கொண்டு, அதனை  முழுமையாக ராஜபக்ஷ்வினர் மீது குற்றம் சுமத்த நடவடிக்கை எடுத்தார்கள்.ஆனால் அவர்களின் இந்த  நடவடிக்கை,  அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவது தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் என்பது மக்கள் முன்னிலேயே ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.அதேபோன்று நாட்டில் போதைப்பொருள் விநியோகிப்பது, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்தான் என்பதும் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.அதனால் தற்போது அரசாங்கத்தின் பால் திரும்பியிருக்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சிக்கிறது.தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உரித்தானது என தெரிவிக்கப்படும் காணியில் கஞ்சா செடி வளர்த்துவருவது தொடர்பான தகவல் வெளிவந்ததுடன் அதனை தனியார் ஊடகம் ஒன்று ஒளிபரப்பி இருந்தது.இவ்வாறு ஒளிபரப்பியதற்கு எதிராக பொலிஸ் திணைக்களம் குறித்த ஊடக நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.  அதேபோன்று குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பொய் செய்தி வெளியிட்டுள்ளது.ஆனால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலே அவர் ஆரம்பத்தில் ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.அவ்வாறு இல்லாமல் பொலிஸ் அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் மீது தனியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பதாக இருந்தால், அதனை நம்புவதற்கு  இந்த  நாட்டு மக்கள் தயாராக இல்லை.அதனால் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸாக செயற்படுவதற்கு பதிலாக மக்கள் விடுதலை முன்னணியின் பொலிஸாக செயற்படுவதாகவே எமக்கு தோன்றுகிறது. அதனால் உண்மை தகவல்களை மறைத்து செயற்படும் பொலிஸாரின் இந்த நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement