• Dec 28 2025

கிராம அலுவலரை மிரட்டிய ஆளும்கட்சி பிரதேச சபை உறுப்பினர் கைது

Chithra / Dec 27th 2025, 11:24 am
image

 கிராம அலுவலரை மிரட்டிய சம்பவம் தொடர்பாக, தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை முந்தல் பொலிஸார் நேற்று  கைது செய்துள்ளனர்.


புத்தளம் பிரதேச சபையின் மங்கள எளிய பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரையே பொலிஸார் இவ்வாறு கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 5 ஆம் திகதி, அனர்த்த நிவாரண கடமைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது,  உறுப்பினர் தன்னை திட்டியதாகவும் கிராம சேவையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து முந்தல் பிரதேச செயலாளருக்கு தகவல் தெரிவித்ததாகவும், 8 ஆம் திகதி நடைபெற்ற அனர்த்த நிவாரணக் குழு கூட்டத்திற்குப் பிறகும் குறித்த உறுப்பினர் தன்னை வாய்மொழியாக திட்டியதாகவும் கிராம சேவையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


பெறப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, இதுகுறித்து பதிலளிக்கும் விதமாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடர்ந்து, நேற்று காலை முந்தல் பொலிஸ் நிலையத்தில் பிரதேச சபையின் உறுப்பினர் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.


சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம அலுவலரை மிரட்டிய ஆளும்கட்சி பிரதேச சபை உறுப்பினர் கைது  கிராம அலுவலரை மிரட்டிய சம்பவம் தொடர்பாக, தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை முந்தல் பொலிஸார் நேற்று  கைது செய்துள்ளனர்.புத்தளம் பிரதேச சபையின் மங்கள எளிய பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரையே பொலிஸார் இவ்வாறு கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த 5 ஆம் திகதி, அனர்த்த நிவாரண கடமைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது,  உறுப்பினர் தன்னை திட்டியதாகவும் கிராம சேவையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இது குறித்து முந்தல் பிரதேச செயலாளருக்கு தகவல் தெரிவித்ததாகவும், 8 ஆம் திகதி நடைபெற்ற அனர்த்த நிவாரணக் குழு கூட்டத்திற்குப் பிறகும் குறித்த உறுப்பினர் தன்னை வாய்மொழியாக திட்டியதாகவும் கிராம சேவையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.பெறப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, இதுகுறித்து பதிலளிக்கும் விதமாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடர்ந்து, நேற்று காலை முந்தல் பொலிஸ் நிலையத்தில் பிரதேச சபையின் உறுப்பினர் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement