• Jul 11 2025

கிராம வீதியை புனரமைத்து தருமாறு கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்..!

Sharmi / Jun 18th 2025, 3:31 pm
image

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  சமீதுகம முன்மாதிரி கிராம வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வீதியை மறைத்து இன்று (18.06.2025) காலை 10.00 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மங்கள எளிய - சின்னப்பாடு பிரதான வீதியில் உள்ள 03 பாலங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் , அதில் ஒரு பாலத்திற்கு மாத்திரம் தற்காலிக பாதை அமைக்காமையினால் மாற்று வழியாக சமீதுகம வீதியின் ஊடாகவே சகல வாகனங்களும் செல்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

இந்த வீதியில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து செய்வதால் குறித்த கிராம  வீதியும் பழுதடைந்து காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வீதி ஊடான போக்குவரத்து ஒன்றரை மணித்தியாலயம் வரை தடைப்பட்டிருந்தது.

பின்னர் அங்கு வருகை தந்த முந்தல் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் முந்தல் பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகதர் அஜீத் கிரேசாந்தத், மங்களவெளி கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதையைப் பரா்வையிட்டனர்.

இதன்போது, முந்தல் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி எதிர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் இதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அளித்த வாக்குறுதியை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


கிராம வீதியை புனரமைத்து தருமாறு கோரி போராட்டத்தில் குதித்த மக்கள். புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  சமீதுகம முன்மாதிரி கிராம வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வீதியை மறைத்து இன்று (18.06.2025) காலை 10.00 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மங்கள எளிய - சின்னப்பாடு பிரதான வீதியில் உள்ள 03 பாலங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் , அதில் ஒரு பாலத்திற்கு மாத்திரம் தற்காலிக பாதை அமைக்காமையினால் மாற்று வழியாக சமீதுகம வீதியின் ஊடாகவே சகல வாகனங்களும் செல்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.இந்த வீதியில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து செய்வதால் குறித்த கிராம  வீதியும் பழுதடைந்து காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வீதி ஊடான போக்குவரத்து ஒன்றரை மணித்தியாலயம் வரை தடைப்பட்டிருந்தது.பின்னர் அங்கு வருகை தந்த முந்தல் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் முந்தல் பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகதர் அஜீத் கிரேசாந்தத், மங்களவெளி கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதையைப் பரா்வையிட்டனர்.இதன்போது, முந்தல் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி எதிர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் இதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அளித்த வாக்குறுதியை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now