கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லமான “சிறீனிவாசா” இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் சிறீனிவாசா, பரந்த பொது நலனுக்காக மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தசார் இந்த வாரம் அறிவித்திருந்தார்.
அதற்கமையவே சிறீனிவாசா இல்லம் நேற்று உத்தியோகபூர்வமாக கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தசாரால் திறந்து வைக்கப்பட்டது.
சர் மார்கஸ் பெர்னாண்டோ மாவதாவில் அமைந்துள்ள இந்த பாரம்பரிய கட்டிடம் சமீபத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு ஒரு இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டது.
"இந்த குடியிருப்பு கணிசமான அளவு பொது நிதியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாக்குறுதியளித்தபடி, இது இப்போது கொழும்பின் குழந்தைகளுக்கும், கலைகளுக்கும், பொது நிகழ்வுகளுக்கும், நகர நிர்வாகத்திற்கும் பயன்படுத்தப்படும்," என்று படப்பிடிப்பு முடிந்ததும் வளாகத்திற்குச் சென்ற மேயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மக்கள் பாவனைக்கு கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லமான “சிறீனிவாசா” இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் சிறீனிவாசா, பரந்த பொது நலனுக்காக மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தசார் இந்த வாரம் அறிவித்திருந்தார். அதற்கமையவே சிறீனிவாசா இல்லம் நேற்று உத்தியோகபூர்வமாக கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தசாரால் திறந்து வைக்கப்பட்டது. சர் மார்கஸ் பெர்னாண்டோ மாவதாவில் அமைந்துள்ள இந்த பாரம்பரிய கட்டிடம் சமீபத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு ஒரு இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டது."இந்த குடியிருப்பு கணிசமான அளவு பொது நிதியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாக்குறுதியளித்தபடி, இது இப்போது கொழும்பின் குழந்தைகளுக்கும், கலைகளுக்கும், பொது நிகழ்வுகளுக்கும், நகர நிர்வாகத்திற்கும் பயன்படுத்தப்படும்," என்று படப்பிடிப்பு முடிந்ததும் வளாகத்திற்குச் சென்ற மேயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.