• Apr 17 2026

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே கூட்டணி - மரிக்கார் எம்.பி. திட்டவட்டம்

Chithra / Apr 6th 2026, 12:00 pm
image

தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துக்கான நீதியை நிலைநாட்டாமையினாலேயே கம்மன்பில போன்றவர்கள் புத்தகம் எழுதி நாடகம் அரகேற்றிக்கொண்டிருக்கிறார்கள். கம்மன்பில, ஒரு புத்தகம் அல்ல 100 புத்தகங்களை எழுதினாலும் ராஜபக்ஷக்களை குற்றவாளிகளாக்க அவரால் ஒருபோதும் முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு இடமளிக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காார் தெரிவித்தார்.


மேலும், ஐக்கிய மக்கள் சக்தி - ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே கூட்டணி அமைக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


பொய் கூறும் திருடர்கள், ‘அநுரவால் முடியாது’ என்ற தலைப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கடவத்தை, மஹர பிரதேசத்தில் நேற்று முன்தினம் (04) ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.


இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,


16 மாதங்களால் வெற்றிப்பெற்ற அரசாங்கத்தை எதிர்பார்த்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, அவுஸ்திரேலியாவில் பணியாற்ற எதிர்பார்த்து, ராஜபக்ஷக்களை கூட்டில் அடைத்து, பெருவாழ்வு மிக்க நாட்டை எதிர்பார்த்த உங்களின் பிள்ளைகளிடம் தற்போது என்ன நிலைமை என்று கேளுங்கள். 


சுகமா என்று மாத்திரம் கேட்க வேண்டாம். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை வைத்து கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை ஏற்றுக்கொண்டார். ஆனால், அவரினால் நீதி கிடைக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது. இருந்தபோதும் அநுரகுமார திசாநாயக்கவினால் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.


தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் நீதியை நிலைநாட்டாமையினாலேயே கம்மன்பில போன்றவர்கள் புத்தகம் எழுதி எழுதி நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 


முடிந்தால் தேர்தலில் போட்டி யிட்டு பாராளுமன்றத்துக்கு வருமாறு கம்மன்பிலவுக்கு நான் சவால் விடுகிறேன். கம்மன்பில, ஒரு புத்தகம் அல்ல 100 புத்த கங்களை எழுதினாலும் ராஜபக்ஷக்களை சுத்தவாளிகளாக்க அவரால் ஒருபோதும் முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு இடமளிக்காது.


அதேபோல், நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே இணைவோம். அதற்கும் கதை கூறுவார்கள். நான் பெண்ணொருவரை காதலித்தேன். தந்தை அதை எதிர்த்தார். வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்தேன். தற்போது தந்தை நோயாளியாகிவிட்டார். 


தந்தையை பார்க்க தற்போது பெரிய வீட்டுக்கு வந்திருக்கிறோம். தற்போது பெரிய வீட்டிலேயே இருக்க முடியுமல்லவா? இதுதான் எங்களின் கதையும் என்றார்.


ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே கூட்டணி - மரிக்கார் எம்.பி. திட்டவட்டம் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துக்கான நீதியை நிலைநாட்டாமையினாலேயே கம்மன்பில போன்றவர்கள் புத்தகம் எழுதி நாடகம் அரகேற்றிக்கொண்டிருக்கிறார்கள். கம்மன்பில, ஒரு புத்தகம் அல்ல 100 புத்தகங்களை எழுதினாலும் ராஜபக்ஷக்களை குற்றவாளிகளாக்க அவரால் ஒருபோதும் முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு இடமளிக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காார் தெரிவித்தார்.மேலும், ஐக்கிய மக்கள் சக்தி - ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே கூட்டணி அமைக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.பொய் கூறும் திருடர்கள், ‘அநுரவால் முடியாது’ என்ற தலைப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கடவத்தை, மஹர பிரதேசத்தில் நேற்று முன்தினம் (04) ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,16 மாதங்களால் வெற்றிப்பெற்ற அரசாங்கத்தை எதிர்பார்த்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, அவுஸ்திரேலியாவில் பணியாற்ற எதிர்பார்த்து, ராஜபக்ஷக்களை கூட்டில் அடைத்து, பெருவாழ்வு மிக்க நாட்டை எதிர்பார்த்த உங்களின் பிள்ளைகளிடம் தற்போது என்ன நிலைமை என்று கேளுங்கள். சுகமா என்று மாத்திரம் கேட்க வேண்டாம். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை வைத்து கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை ஏற்றுக்கொண்டார். ஆனால், அவரினால் நீதி கிடைக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது. இருந்தபோதும் அநுரகுமார திசாநாயக்கவினால் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் நீதியை நிலைநாட்டாமையினாலேயே கம்மன்பில போன்றவர்கள் புத்தகம் எழுதி எழுதி நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் தேர்தலில் போட்டி யிட்டு பாராளுமன்றத்துக்கு வருமாறு கம்மன்பிலவுக்கு நான் சவால் விடுகிறேன். கம்மன்பில, ஒரு புத்தகம் அல்ல 100 புத்த கங்களை எழுதினாலும் ராஜபக்ஷக்களை சுத்தவாளிகளாக்க அவரால் ஒருபோதும் முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு இடமளிக்காது.அதேபோல், நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே இணைவோம். அதற்கும் கதை கூறுவார்கள். நான் பெண்ணொருவரை காதலித்தேன். தந்தை அதை எதிர்த்தார். வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்தேன். தற்போது தந்தை நோயாளியாகிவிட்டார். தந்தையை பார்க்க தற்போது பெரிய வீட்டுக்கு வந்திருக்கிறோம். தற்போது பெரிய வீட்டிலேயே இருக்க முடியுமல்லவா இதுதான் எங்களின் கதையும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement