• May 18 2025

திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஒரு நாள் செயலமர்வு.

Thansita / May 17th 2025, 3:42 pm
image

ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் பத்திரிகையாளர்களின் பங்கு'என்ற கருப்பொருளில்  திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஒருநாள் 

செயலமர்வு இன்று சனிக்கிழமை (17) திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை பத்திரிகை பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த செயலமர்வு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. G. M. ஹேமந்தகுமார தலைமையில் நடைபெற்றது.

தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் பிரியான் விஜபண்டரா, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பிரதாணி சிசிறியாப்பா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு, விளக்கமளித்தனர்.  

திருகோணமலை மாவட்டத்தில் பிராந்திய செய்தியாளர்களாக கடமையாற்றும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த 40 ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு இலங்கை பத்திரிகை பேரவையினால், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.


திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஒரு நாள் செயலமர்வு. ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் பத்திரிகையாளர்களின் பங்கு'என்ற கருப்பொருளில்  திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஒருநாள் செயலமர்வு இன்று சனிக்கிழமை (17) திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இலங்கை பத்திரிகை பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த செயலமர்வு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. G. M. ஹேமந்தகுமார தலைமையில் நடைபெற்றது.தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் பிரியான் விஜபண்டரா, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பிரதாணி சிசிறியாப்பா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு, விளக்கமளித்தனர்.  திருகோணமலை மாவட்டத்தில் பிராந்திய செய்தியாளர்களாக கடமையாற்றும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த 40 ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.இதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு இலங்கை பத்திரிகை பேரவையினால், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement