• May 20 2025

போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Chithra / May 19th 2025, 3:47 pm
image

  

16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் பிற அணிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1,256 பிற அணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலதிகமாக, இலங்கை விமானப்படையின் 12 அதிகாரிகள் மற்றும் 848 பிற அணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 10,093 பிற அணிகளுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு   16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் பிற அணிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1,256 பிற அணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.மேலதிகமாக, இலங்கை விமானப்படையின் 12 அதிகாரிகள் மற்றும் 848 பிற அணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 10,093 பிற அணிகளுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement