• Jul 18 2026

கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளி விளையாட்டுப்போட்டி; ரவிகரன் எம்.பி பங்கேற்பு!

Ziya / Jul 17th 2026, 3:28 pm
image

முல்லைத்தீவு - கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளிச் சிறார்களின் 2026ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டி சிறப்புற இடம்பெற்றது.


குறித்த முன்பள்ளி விளையாட்டுப்போட்டி நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.


அந்தவகையில் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில், தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல், விருந்தனர் உரை என்பன இடம்பெற்றது. 


அதனையடுத்து ஒலிம்பிக் தீபமேற்றல் இடம்பெற்றதுடன், சிறார்களின் விளையாட்டுநிகழ்வுகள் இடம்பெற்றன.


அதனையடுத்து சிறார்களின் வினோதஉடைப் போட்டி இடம்பெற்றதுடன், விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற சிறார்களுக்கும் இதன்போது பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.


மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, பொதுச் சுகாதாரப் பரிசோதகர், சமூகசெயற்பாட்டாளர் வே.பரமேந்திரம், முன்பள்ளிகளின் இணைப்பாளர், விளையாட்டுக்கழகத் தலைவர், அயல் முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளி விளையாட்டுப்போட்டி; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு - கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளிச் சிறார்களின் 2026ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டி சிறப்புற இடம்பெற்றது.குறித்த முன்பள்ளி விளையாட்டுப்போட்டி நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.அந்தவகையில் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில், தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல், விருந்தனர் உரை என்பன இடம்பெற்றது. அதனையடுத்து ஒலிம்பிக் தீபமேற்றல் இடம்பெற்றதுடன், சிறார்களின் விளையாட்டுநிகழ்வுகள் இடம்பெற்றன.அதனையடுத்து சிறார்களின் வினோதஉடைப் போட்டி இடம்பெற்றதுடன், விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற சிறார்களுக்கும் இதன்போது பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, பொதுச் சுகாதாரப் பரிசோதகர், சமூகசெயற்பாட்டாளர் வே.பரமேந்திரம், முன்பள்ளிகளின் இணைப்பாளர், விளையாட்டுக்கழகத் தலைவர், அயல் முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement