• Jul 17 2026

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் ஆடிப்பிறப்பு

Chithra / Jul 17th 2026, 4:01 pm
image


வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில், மன்னார் மாவட்டச் செயலகம், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை இந்துமா மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (17) காலை மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.


'ஆடிபிறப்பில் தமிழர் நாம் கூடி குதூகலித்து கொண்டாடுவோம்' எனும் தொனிப் பொருளில் பாடசாலையின் பிரதி அதிபர் தலைமையில் ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டதோடு, மன்னார் வலயக் கல்வி திணைக்களத்தின் பிரதி கல்வி பணிப்பாளர், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.


இதன் போது நவாலியூர் சோமசுந்தர புலவரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அரச அதிபர் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.


குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் ஆடிப்பிறப்பு வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில், மன்னார் மாவட்டச் செயலகம், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை இந்துமா மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (17) காலை மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.'ஆடிபிறப்பில் தமிழர் நாம் கூடி குதூகலித்து கொண்டாடுவோம்' எனும் தொனிப் பொருளில் பாடசாலையின் பிரதி அதிபர் தலைமையில் ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டதோடு, மன்னார் வலயக் கல்வி திணைக்களத்தின் பிரதி கல்வி பணிப்பாளர், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.இதன் போது நவாலியூர் சோமசுந்தர புலவரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அரச அதிபர் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement