• Apr 17 2026

பற்றி எரிந்த பழமையான நீதிமன்றக் கட்டிடம் -அதிரடியான செயற்பட்டதீயணைப்பு படையினர்!

Ziya / Mar 24th 2026, 12:10 pm
image

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், ஃப்ளாய்ட் கவுண்டியில் (Floyd County) அமைந்துள்ள மிகப்பழமையான மற்றும் வரலாற்றுப் புகழ்பெற்ற நீதிமன்றக் கட்டிடத்தில்   நேற்றைய தினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரோம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் 1892-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 

130 ஆண்டுகளுக்கும் மேலாக ஜார்ஜியாவின் நீதித்துறை அடையாளமாகத் திகழ்ந்த இந்தக் கட்டிடத்திலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் கோபுரப் பகுதிகளில் இருந்து தொடங்கிய தீ, மரத்தாலான உட்பகுதிகள் காரணமாக மளமளவெனப் பரவி ஒட்டுமொத்தக் கட்டிடத்தையும் சூழ்ந்தது.

தீ பரவத் தொடங்கிய உடனேயே கட்டிடத்திற்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஃப்ளாய்ட் மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

இதனால் உயிர்ச்சேதங்கள் ஏதும் நிகழவில்லை.

தீயணைப்புப் பணிகளுக்காக ரோம் நகரின் மையப் பகுதியில் உள்ள பிராட் தெரு (Broad Street) மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளைக்  பொலிஸார் மூடியுள்ளனர்.

நச்சுப் புகை மற்றும் கட்டிடம் இடியும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


பற்றி எரிந்த பழமையான நீதிமன்றக் கட்டிடம் -அதிரடியான செயற்பட்டதீயணைப்பு படையினர் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், ஃப்ளாய்ட் கவுண்டியில் (Floyd County) அமைந்துள்ள மிகப்பழமையான மற்றும் வரலாற்றுப் புகழ்பெற்ற நீதிமன்றக் கட்டிடத்தில்   நேற்றைய தினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ரோம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் 1892-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 130 ஆண்டுகளுக்கும் மேலாக ஜார்ஜியாவின் நீதித்துறை அடையாளமாகத் திகழ்ந்த இந்தக் கட்டிடத்திலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் கோபுரப் பகுதிகளில் இருந்து தொடங்கிய தீ, மரத்தாலான உட்பகுதிகள் காரணமாக மளமளவெனப் பரவி ஒட்டுமொத்தக் கட்டிடத்தையும் சூழ்ந்தது.தீ பரவத் தொடங்கிய உடனேயே கட்டிடத்திற்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஃப்ளாய்ட் மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர்ச்சேதங்கள் ஏதும் நிகழவில்லை.தீயணைப்புப் பணிகளுக்காக ரோம் நகரின் மையப் பகுதியில் உள்ள பிராட் தெரு (Broad Street) மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளைக்  பொலிஸார் மூடியுள்ளனர்.நச்சுப் புகை மற்றும் கட்டிடம் இடியும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement