• May 19 2025

NPP கட்சி எங்களையும் எங்கள் நிலத்தையும் விட்டுவிடுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம்

Chithra / May 18th 2025, 12:32 pm
image

எங்கள் வலி தொடர்கிறது, எங்கள் போராட்டம் தொடர்கிறது, நீதி மற்றும் சுதந்திரத்திற்காக எங்கள் கோரிக்கை ஒருபோதும் அமைதியாகாது என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரித்தனர். 

தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கான 16ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

அவர்கள் போராட்டம் நடத்தும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டு,ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செய்யப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் 

இந்த நாள் மிகவும் வேதனையானது. போரின் கொடூரமான முடிவை நினைவூட்டுகிறது, அங்கு அப்பாவி தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் போர் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவாக மட்டுமல்ல, தமிழர் துன்பங்களுக்கு உலகளாவிய அலட்சியத்தின் விளைவாகவும் இருந்தது. 

முழு உலகமும் நம்மைப் புறக்கணித்தது, முள்ளிவாய்க்காலை தமிழர் நம்பிக்கைகளின் கல்லறையாக மாற்ற அனுமதித்தது.

இன்று, முள்ளிவாய்க்கால் நாளில், உலகிற்கு நினைவூட்டுகிறோம் எங்கள் வலி தொடர்கிறது, எங்கள் போராட்டம் தொடர்கிறது, நீதி மற்றும் சுதந்திரத்திற்காக எங்கள் கோரிக்கை ஒருபோதும் அமைதியாகாது. என்றனர்.


NPP கட்சி எங்களையும் எங்கள் நிலத்தையும் விட்டுவிடுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம் எங்கள் வலி தொடர்கிறது, எங்கள் போராட்டம் தொடர்கிறது, நீதி மற்றும் சுதந்திரத்திற்காக எங்கள் கோரிக்கை ஒருபோதும் அமைதியாகாது என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரித்தனர். தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கான 16ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் இன்று இடம்பெற்றது.அவர்கள் போராட்டம் நடத்தும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது உயிரிழந்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டு,ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செய்யப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் இந்த நாள் மிகவும் வேதனையானது. போரின் கொடூரமான முடிவை நினைவூட்டுகிறது, அங்கு அப்பாவி தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் போர் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவாக மட்டுமல்ல, தமிழர் துன்பங்களுக்கு உலகளாவிய அலட்சியத்தின் விளைவாகவும் இருந்தது. முழு உலகமும் நம்மைப் புறக்கணித்தது, முள்ளிவாய்க்காலை தமிழர் நம்பிக்கைகளின் கல்லறையாக மாற்ற அனுமதித்தது.இன்று, முள்ளிவாய்க்கால் நாளில், உலகிற்கு நினைவூட்டுகிறோம் எங்கள் வலி தொடர்கிறது, எங்கள் போராட்டம் தொடர்கிறது, நீதி மற்றும் சுதந்திரத்திற்காக எங்கள் கோரிக்கை ஒருபோதும் அமைதியாகாது. என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement